ரொனால்டோ 700

கீவ்: ஐரோப்பிய சாம்பியன் கால்பந்து (யுரோ 2020) தகுதிப் போட்டியில் உக்ரைனுக்கு எதிராக கோல் போட்ட போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோரொனால்டோ சர்வதேச, முதல்தர போட்டிகளில் 700 கோல் என்ற சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார்.அடுத்த ஆண்டு ஐரோப்பிய சாம்பியன் லீக் (யுரோ 2020) கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. அதற்கான தகுதிச் சுற்று போட்டிகளில் 55 ஐரோப்பிய நாடுகள் விளையாடி வருகின்றன. போர்ச்சுகல் - உக்ரைன் இடையிலான போட்டி உக்ரைனில் உள்ள கீவ் நகரில் நேற்று நடைபெற்றது.அதில் ஆரம்பம் முதலே உக்ரைன் வேகம் காட்டியதால் 2-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றது.  

Advertising
Advertising

ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி  வாய்ப்பை  போர்ச்சுகல்  வீரர் ரொனால்டோ அற்புதமாக கோலாக்கினார். அதன் மூலம் சர்வதேச மற்றும் முதல்தர  போட்டிகளில்  700 கோல் அடித்த சாதனையை படைத்தார். இதில் தேசிய அணிக்காக 95 கோல்,  சர்வதேச கால்பந்து கிளப்களான ரியல் மேட்ரிட் (450 கோல்),  மான்செஸ்டர் (118), ஜுவன்டஸ் (35),  ஸ்போர்ட்டிங் (5) அணிகளுக்காக கோல் மழை பொழிந்துள்ளார். ரொனால்டோ சாதனை கோல் அடித்தாலும், இப்போட்டியில் உக்ரைன் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தியதுடன் ஐரோப்பிய சாம்பியன் போட்டியில் விளையாடவும் தகுதிப் பெற்றது.

Related Stories: