ஆவின் பால் டேங்கர் லாரி ஸ்டிரைக் ஒத்திவைப்பு

நாமக்கல் :   ஆவின் நிர்வாகம், வாடகை பாக்கியை தரவேண்டும். புதிய டெண்டரை நடத்தி, வாடகையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக, பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று, சேலம் ஆவின் பொதுமேலாளர் விஜய்பாபு, பால் டேங்கர் லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தற்காலிக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணி கூறுகையில், நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஆவின் நிர்வாக இயக்குனர் வெளிநாட்டில் இருந்து திரும்பிய உடன்,  புதிய வாடகை டெண்டர் இறுதி செய்யப்படும் என  தெரிவித்துள்ளார். இதை ஏற்று தற்காலிகமாக ஸ்டிரைக்கை ஒத்திவைத்துள்ளோம்  என்றார்.

Related Stories: