ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது சவுதி அரேபியா ஏவுகணை தாக்குதல்

டெஹ்ரான்:  ஈரான் நாட்டை சேர்ந்த 2 எண்ணெய் கப்பல்கள் மீது சவுதி அரேபியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.  ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது முதல் இருநாடுகளுக்கும் இடையே கடுமையான  மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலைக மீது டிரோன் எனப்படும் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக பொறுப்பேற்ற  பிறகும், ஈரான் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த தாக்குதலை நடத்தவில்லை என ஈரான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றது.

ஈரானுக்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன. சவுதி அரேபியாவின் துறைமுக நகரமான ஜித்தா அருகே சிவப்பு கடல் பகுதியில் சென்ற  ஈரானின் 2 எண்ணெய் கப்பல்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கப்பலில் இருந்த 2 சரக்கு அறைகள் சேதமடைந்ததாகவும், இதன் காரணமாக எண்ணெய் கடலில் வீணாகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்,  தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் கப்பல்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதேபோல், இந்த தாக்குதல் குறித்து சவுதி அரேபியா அரசு அதிகாரிகளும்  கருத்து கூற மறுத்தனர்.

Related Stories: