21 ஆண்டு முந்தைய வழக்கில் பாஜ எம்எல்ஏவுக்குமூன்று மாதம் சிறை

பாலன்பூர்: அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், குஜராத் பாஜ எம்எல்ஏ ஒருவருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம், தீசா தொகுதி பாஜ எம்.எல்.ஏ சசிகாந்த் பாண்ட்யா.  அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக இவர் மீது கடந்த 1998ம் ஆண்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 21 ஆண்டுகளுக்குப்பின் தீசா நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அவருக்கு 3 மாத சிறை தண்டனையும்,  ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்காக, பாண்ட்யாவுக்கு நீதிமன்றம் ஜாமீனும் வழங்கியது.

Related Stories: