தமிழக பாஜவின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய 3 வித பட்டியல் தயார்?: டிசம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகிறது

சென்னை: தமிழக பாஜவின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய 3 விதமான பட்டியலை கட்சி மேலிடம் தயார் செய்து வருகிறது. டிசம்பர் மாதத்தில் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பாஜ தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து தான் வகித்து வந்த மாநில பாஜ தலைவர் மற்றும்  அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளையும் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். தமிழக பாஜ தலைவர் பதவி காலியாகி சுமார் 1 மாதத்துக்கும் மேலாக தலைவரே இல்லாமல் மாநிலத்தில் கட்சி இருந்து வருகிறது. இதனால், முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. காரணம் டெல்லியை சேர்ந்த தமிழக  பொறுப்பாளர்களை சாதாரண நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில் மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையிலான சந்திப்பு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

Advertising
Advertising

அவரை வரவேற்க தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் பிரதமர் வரும் போது பாஜவின் மாநில தலைவர் தலைமையில் சார்பில் உற்சாக வரவேற்பு அளிப்பது வழக்கம். தற்போது  தலைவர் இல்லாததால் வரவேற்பு அளிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக பாஜ தரப்பில் கூறப்படுகிறது. தலைவர் இருந்தால் வரவேற்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பார். ஆனால், தற்போது யார் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது என்பதில் பிரச்னை  இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக பாஜ தலைவரை நியமிப்பதில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பாஜ மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை தலைவராக்க வேண்டும் என்று  வலியுறுத்தி வருகின்றன. அதே நேரத்தில் மாற்று கட்சியில் இருந்து பாஜவில் இணைந்த மிகவும் செல்வாக்கானவருக்கு பதவி வழங்க வேண்டும் என்றும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.அவர்களுக்கு பதவி வழங்கினால் மற்ற கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்களை பாஜ பக்கம் எளிதாக இழுக்கலாம் என்றும் கட்சி தலைமை கருதுகிறது. இதனால், அண்மையில் பாஜவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார்  நாகேந்திரனுக்கு பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் இளைஞருக்கு வாய்ப்பு அளித்து தேவேந்திர பட்நவிஸை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதே போல பாஜ தலைவரை ஒரு இளைஞரை நியமிக்கலாமா என்ற பேச்சும் அடிப்பட்டு வருகிறது. அப்படி இளைஞர்களுக்கு வாய்ப்பு  அளிக்கும் பட்சத்தில் பாஜ மாநில செயலாளர் கே.டி.ராகவன், இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் ஆகியோரில் ஒருவரை நியமிக்கலாம் என்றும் பேச்சும் எழுந்துள்ளது. தலைவர் பதவியை பிடிக்க ஒவ்வொருவரும் கட்சி மேலிடத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மூலம் காய்களை நகர்த்தி வருகின்றனர். தற்போது மகாராஷ்டிரா மாநில தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் பாஜகவின் அமைப்பு ரீதியிலான  தேர்தல் நடைபெற்று வருகிறது.

Related Stories: