டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்: டிடிவி வேண்டுகோள்

சென்னை: டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என்று ெதாண்டர்களுக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிடுமாறு கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

Advertising
Advertising

நிலவேம்பு கசாயம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை ‘‘காதி கிராப்ட்’’ போன்ற அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் வாங்கி தயாரித்து விநியோகிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, டெங்கு கொசு உருவாக்கம் மற்றும் அதன் பாதிப்புகளை பற்றிய துண்டறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

Related Stories: