ஏடிஎம் மெஷினில் கொள்ளை முயற்சி: 2 கல்லூரி மாணவர்கள் கைது

சென்னை: அதிகாலையில் ஏடிஎம் மெஷினை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற, 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது ெசய்தனர்.தாம்பரம் அருகே படப்பை பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் ஏடிஎம் இயந்திரத்தை மர்மநபர்கள் உடைக்க முயற்சி செய்தனர். இதனால், அந்த மையத்தில் பொருத்தப்பட்டுள்ள அலாரம் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒலித்தது.இதையறிந்து உடனே, வங்கி அதிகாரிகள், படப்பை பகுதியில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மணிமங்கலம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர்.

Advertising
Advertising

அப்போது ஏடிஎம் மையத்தில் சந்தேகிக்கப்படும்படி 2 பேர் நிற்பதை கண்ட போலீசார், அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், 2 பேரும், காஸ் கட்டிங் மூலம், ஏடிஎம் மெஷினை உடைத்து, அதில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.அதில் காஞ்சிபுரம் பங்காரு அம்மன் தோட்டத்தை சேர்ந்த இறையன்பு (19), காஞ்சிபுரம் படவேட்டம்மன் கோயில் தெருவை சேர்ந்த 17 வயது   சிறுவன்  என தெரிந்தது. பல்லாவரத்தில் உள்ள கல்லூரியில் படிக்கின்றனர். அவர்களிடம் இருந்து சிலிண்டர், காஸ் கட்டிங், ஸ்பேனர், டெஸ்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories: