மின் இணைப்பு கட்டணம் உயர்வு: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

சென்னை:எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: புதிய மின் இணைப்பு கட்டணம், மின் மீட்டர் இடமாற்றக் கட்டணம், பெயர் மாற்றக் கட்டணம், வளர்ச்சி, பரமரிப்பு கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் 100% முதல் 300% வரை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை கண்டிப்பதோடு கட்டண உயர்வை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்.

Advertising
Advertising

வீடு மற்றும் கடைகளுக்கான வாடகை அதிகரித்த நிலையில், மின்சார வாரியத்தின் வளர்ச்சிக் கட்டணம், பராமரிப்பு கட்டணம் உள்ளிட்டவைகளாலும் மேலும் வாடகைதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே, தமிழக அரசு உடனடியாக முற்றிலும் நியாயமற்ற முறையில் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள மின்சார வாரியத்தின் கட்டண உயர்வை  ரத்து செய்ய வேண்டும்.

Related Stories: