பண்டிகைகள் நம்மை ஒன்றிணைத்து வடிவமைக்கின்றன: டெல்லியில் நடைபெற்ற தசரா விழாவில் பிரதமர் மோடி உரை

டெல்லி: டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்றுவரும் தசரா விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். நவராத்திரி விழா நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.  கர்நாடகாவில் மைசூரு மாகாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் நவராத்திரி விழாவை தசரா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடி வந்தனர். அந்த பழமையான கலாசாரம்  அழியாமல் காக்கும் வகையில், மாநில அரசின் சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தலைநகர் டெல்லி துவாரகாவில் உள்ள DDA மைதானத்தில் துவாரகா ஸ்ரீ ராம் லீலா சொசைட்டி என்ற அமைப்பு சார்பில்  நடைபெற்று வரும் தசரா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று முன்னாள் எம்.எல்.ஏவும், சங்கத்தின் தலைவருமான ராஜேஷ் கெலோட் தெரிவித்தார்.

இதன்படி, டெல்லியில் நடைபெறும் தசரா விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ராவண உருவ பொம்மையை வில் விட்டு எரித்தார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, நம் நாட்டில், திருவிழாக்கள் நமது மதிப்புகள், கல்வி  மற்றும் சமூக வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். பண்டிகைகள் நம்மை ஒன்றிணைத்து வடிவமைக்கின்றன. அவை ஆற்றல், உற்சாகம் மற்றும் புதிய கனவுகளை உருவாக்குகின்றன என்றார். இந்த விஜய தசமி அன்று, மகாத்மா காந்தியின் 150  வது பிறந்த நாளைக் குறிக்கும் நேரத்தில், எனது சக குடிமக்களுக்காக ஒரு வேண்டுகோள் உள்ளது.

இந்த ஆண்டு ஒரு பணியை மேற்கொண்டு அதை அடைவதற்கு உழைப்போம். இந்த நோக்கம், உணவை வீணாக்குவது, ஆற்றலைப் பாதுகாப்பது, தண்ணீரைச் சேமிப்பது அல்ல என்றார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மகளையும் மதிக்க  வேண்டியது எங்கள் பொறுப்பு. மான் கி பாதின் போது எங்கள் மகள்கள் எங்களுக்கு லக்ஷ்மி என்று குறிப்பிட்டேன். இந்த வரவிருக்கும் தீபாவளி அவர்களின் சாதனைகளை கொண்டாடுவோம் என்றார்.

இந்த விழாவில் பிரதமருடன் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு முதல், பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் நடைபெறும் தசரா விழாவில் கலந்து  கொண்டு வந்தார். இந்த வருடம்  டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி தசரா வாழ்த்து:

முன்னதாக, பிரதமர் மோடி வீடியோ மூலமாக மக்களுக்கு தன் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். ராவணனை எதிர்த்து ஸ்ரீராமர் போர் புரியும் போது சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் அதில் பங்கேற்றனர். அதேபோல் இன்று நம்  சமுதாயத்தில் நிலவும் தீமைகளை எதிர்த்து போராட அனைவரும் கைகோர்க்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடி தன் வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.

Related Stories: