ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறை: ஐ.நா. சபை கண்டனம்

ஈராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்க காரணமான வன்முறைக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈராக்கில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அரசின் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகின்றது. பல்வேறு பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் திரண்டு அரசுக்கு  எதிராக முழக்கமிட்டனர். இந்நிலையில் போராட்டங்களுக்கு தடை விதித்து பிரதமர் அதெல் அப்தெல் மாதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினார்கள். பாக்தாத் மற்றும் பல்வேறு தெற்கு நகரங்களில் போராட்டக்காரர் மற்றும் போலீசார் இடையே வன்முறை வெடித்தது.

கடந்த செவ்வாய் முதல் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை மற்றும் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 99 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுவதாவது; இந்த வன்முறைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வன்முறைக்கு காரணமானர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் ஐ.நா. பொதுச் செயலாளரின் சிறப்பு பிரதிநிதி ஜெனின் ஹென்னிஸ் ப்ளாஸ்சர்ட் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: