உச்சிப்புளி கடல் பகுதியில் கரை ஒதுங்கிய படகு

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே தலைதோப்பு கடற்கரை பகுதியில் நேற்று சேதமடைந்த படகின் உடைந்த பகுதி கரை ஒதுங்கியது. சுமார் 18 அடி நீளம், 6 அடி அகலத்தில் நீலம், வெள்ளை நிறத்தில் இருந்த  படகில் மெர்சி பீட்டர், பி3.12 என்று எழுதப்பட்டிருந்தது. கரை ஒதுங்கிய படகு உடையாமல் இருந்தால் 40 அடிக்கு மேல் நீளம் கொண்டதாக இருக்கும் என இப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். படகு குறித்து தகவல் கிடைத்து மண்டபம் மரைன்  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படகை பார்வையிட்டனர். விசாரணையில் குறிப்பிட்ட படகு, கேரளாவை சேர்ந்த மெர்சி பீட்டருக்கு சொந்தமானது என்றும், கோழிக்கோடு கடல் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு இரண்டாக முறிந்து  மூழ்கியதும் தெரிய வந்தது

Related Stories: