ஜிஎஸ்டி வசூல் திடீர் சரிவு

புதுடெல்லி: கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி 91,916 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளது.   கடந்த செப்டம்பர் மாதத்துக்கான  ஜிஎஸ்டி வசூல் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி 91,916 கோடி வசூல் ஆகியுள்ளன. இது கடந்த ஆண்டு செப்டம்பர் வசூலை விட 2.67 சதவீதம் குறைவு. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி 94,442 கோடி வசூல் ஆகியிருந்தது.  கடந்த மாத ஜிஎஸ்டி வசூலில் மத்திய ஜிஎஸ்டி 16,630 கோடி, மாநில ஜிஎஸ்டி 22,598 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 45,069 கோடி. இதில் இறக்குமதி மூலம் வசூலான 22,097 கோடி  அடக்கம். செஸ் வரி 7,620 கோடி  வசூல் ஆகியுள்ளது. இதில் இறக்குமதி மூலம் 728 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான 75.94 லட்சம் ஜிஎஸ்டிஆர் 3பி படிவங்கள், கடந்த மாதம் 30ம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாத ஜிஎஸ்டி வசூல் 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த பட்ச அளவாக கருதப்படுகிறது.

Related Stories: