போச்சம்பள்ளியில் பெயர்ந்து விழுந்த வணிக வளாக மேற்கூரை: வியாபாரிகள் அச்சம்

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி தாலுகா வணிக வளாக கடையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். போச்சம்பள்ளியில் கடந்த 2001ம் ஆண்டு பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, 37 வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது. இந்த பஸ் நிலையத்திற்கு சென்னை, பாண்டிசேரி, சேலம்,  திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட நகரங்களுக்கு  போச்சம்பள்ளி வழியாக தினமும் 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வணிக வளாகத்தில் ஓட்டல் கடை, டீக்கடை, பழக்கடை, உரக்கடை  உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில், வணிக வளாகத்தில் ஜெகதீசன் என்பவர் உரக்கடை வைத்துள்ளார்.

நேற்று மதியம் வீட்டிற்கு சென்றுவிட்டு, திரும்பி வந்து  பார்த்தபோது கடையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர்  கடையில் இல்லாத நேரத்தில் மேற்கூரை விழுந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், பல ஆண்டுகளாகவே வணிக வளாக கடைகள் சிதிலமடைந்துள்ளது. இதுகுறித்து பர்கூர் பிடிஓவிடம் புகார்   அளித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளார். எனவே, இந்த சம்பவத்திற்கு பிறகாவது கடைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: