வெள்ள பாதிப்பு கேரள முதல்வருடன் ராகுல் காந்தி சந்திப்பு

புதுடெல்லி: கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் ராகுல் காந்தி நேற்று சந்தித்து பேசினார்.  கேரளாவில் சில நாட்களுக்கு முன் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வயநாடு மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழையினால் பெரும்  சேதமடைந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனை ராகுல் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார்.

அப்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு தொகுதி மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தினார்.

மேலும், தேசிய நெடுஞ்சாலை 766ல் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறித்தும் ஆலோசித்தார். ராகுல் காந்தியுடன் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், காங்கிரஸ் எம்எல்ஏ பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும்  சென்றனர்.

சந்திப்புக்கு பின் ராகுல் அளித்த பேட்டியில், “ வெள்ள பாதிப்பு, உடனடி நிவாரணம், இரவு நேர போக்குவரத்து தடை மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறினோம். முதல்வர் இது குறித்து மத்திய  அரசிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படும். பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று உறுதி அளித்தார்,” என்றார்.

Related Stories: