குடந்தை ஜி.ஹெச்சில் இருந்த பழமையான வேப்ப மரம் ரோட்டில் சாய்ந்தது: போக்குவரத்து பாதிப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுசெல்கின்றனர். மேலும் நோயாளிகளை உடனிருந்து கவனிக்க அவர்களது உறவினர்கள் வருவார்கள். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்நிலையில் குடந்தையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்றுகாலை பலத்த காற்று வீசியது. அப்போது அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றுச்சுவரை ஒட்டி உள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்து காம்பவுன்ட் மற்றும் அதையொட்டி உள்ள கச்சேரி சாலையில் சாய்ந்தது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் வந்து மரத்தை அப்புறப்படுத்தினர். ஆர்டிஓ அலுவலகம், பள்ளிகள், ஆஸ்பத்திரிகள், சார்பதிவாளர் அலுவலகம் உள்ள பரபரப்பான இந்த சாலையில் மரம் விழும்போது எந்த வாகனங்களோ, மக்களோ வராததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Related Stories: