சென்னையில் ஒரே நாளில் ரூ.344 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை: ஒரு சவரன் ரூ.28,360க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின்(22 கேரட்) விலை ஒரே நாளில் ரூ.344 குறைந்து ஒரு சவரன் ரூ.28,360க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ.43 குறைந்து ரூ.3,545க்கு விற்பனைாகி வருகிறது. இதன்மூலம் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1800 ரூபாய் வரை குறைந்துள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு சவரன் 29,616 ரூபாய்க்கும், ஒரு கிராம் 3702 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலை கிலோவுக்கு மேலும் 800 ரூபாய் சரிந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.47,400 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.47.40 காசுகளுக்கு விற்பனை ஆகிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியதிலிருந்து தங்கம் தொடர்ந்து விலை ஏற்றம் கண்டது.

பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. இதற்கு முன்னதாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்ததன் மூலம் சவரனுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதாவது செய்கூலி சேதாரம் சேர்த்து ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் 33 ஆயிரம் 34 ஆயிரம் வரை ஆனது. இந்த நிலையில் மீண்டும் குறைய தொடங்கிய தங்கம் விலை தற்போது 28 ஆயிரத்து தாண்டி விற்பனையாகி வருகிறது. அவ்வாறு பார்த்தால் தற்போதைய நிலவரப்படி செய்கூலி சேதாரம் சேர்த்து ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் 31 ஆயிரம் ரூபாய் ஆகும் நிலை உருவாகியுள்ளது. சவரன் விலை 30 ஆயிரத்தில் இருந்து குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருவதால், தங்கம் வாங்க மக்கள் சற்று ஆர்வம் காண்பிக்க தொடங்கி உள்ளனர்.

Related Stories: