இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92-வது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 92-வது பிறந்தநாள் அக்டோபர் 1-ம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திரையுலகம் சார்பிலும் சென்னையில் இன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதில் திரையுலகத்தை சார்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு சார்பில், தமிழகம் முழுவதும், மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் / பொது இடத்தில், நடிகர்திலகத்தின் புகைப்படத்தை வைத்து மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தி வருகின்றன. ரத்ததானம், அன்னதானம், போன்ற சமூக நலப்பணிகளும் நடைபெறுகின்றன.

இதற்கிடையே, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவை போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி அருகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டப்பட்டு அங்கு அவருக்கு திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டபத்தில், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சிவாஜி கணேசன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, நடிகர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி:

நடிகர் சிவாஜி பற்றி நாள்முழுவதும் பேசி கொண்டிருக்கலாம்; எந்த கதாபாத்திரம் ஆனாலும் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி என்று புகழாரம் சூட்டினார்.

Related Stories: