தமிழ் வழியில் படித்தவர்கள் வேலைபெற டிஎன்பிஎஸ்சி தேர்வில் மாற்றம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழ் வழியில் படித்தவர்கள் வேலை பெற வேண்டும் என்பதற்காக சில மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று  அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக அரசு சார்பில், முன்னாள் மேயர் சிவராஜின் 128வது பிறந்தநாள் விழா தங்கசாலையில் நேற்று காலை நடைபெற்றது. அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இதன்பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடையே கூறியதாவது:டிஎன்பிஎஸ்சி தேர்வு விவகாரத்தில் மொழி குறித்த வினாக்கள் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் அழகிரி பேசியுள்ளார். அரசு பணியில் ஆங்கிலம் படித்தவர்கள்தான் 60 சதவீதம் தேர்வாகி வருகின்றனர். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு  வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் டிஎன்பிஎஸ்சி தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறது. தலைமை செயலகத்தில் துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு  பிஇ, எம்பிஏ படித்த பட்டதாரிகள் நேர்காணலில் கலந்து கொள்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழக இளைஞர்களிடையே அரசு வேலைவாய்ப்பு குறித்த ஆர்வம் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் அரசு சார்பில், அளிக்கக்கூடிய  திறன் மேம்பாட்டு பயிற்சியை கற்றுகொண்டு சொந்த தொழில் துவங்க முயற்சி மேற்கொள்ளவேண்டும்.நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: