வெளிநாட்டவர் ரூ.7,714 கோடி முதலீடு

புதுடெல்லி: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதம் இதுவரை, பங்குச்சந்தை, கடன் பத்திரங்களில்  ₹7,714 கோடி முதலீடு செய்துள்ளனர். பொருளாதார மந்த நிலை, தொழில்துறை உற்பத்தி பின்னடைவு, வேலையிழப்புகள் போன்ற காரணங்களால் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்ததை விட குறைவாக 5 சதவீதத்துக்கு வந்து விட்டது. இதனால், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை குறைத்துக்கொண்டனர். நிகர முதலீட்டில் பெரும்பாலானவற்றை வாபஸ் பெற்றனர். ஸ்திரமற்ற நிலை காரணமாக இவர்கள், கடந்த ஜூலை மாதத்தில் பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் ₹2,985.88 கோடி, ₹5,920.02 கோடியை விலக்கிக் கொண்டனர்.

ஆனால், இந்த மாதம் மத்திய அரசு பெரிய நிறுவனங்களுக்கான வரி குறைப்பு உட்பட சில சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால், ஏற்றம் பெறும் என்ற நம்பிக்கையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் இந்த மாதம் முதலீடு செய்துள்ளனர். கடந்த 3ம் தேதி முதல் 27ம் தேதி வரை ₹7,849.89 கோடி முதலீடு செய்துள்ளனர். இதில் ₹135.59 கோடி வாபஸ் பெற்றனர். இதன்மூலம் நிகர முதலீடு ₹7,714.30 கோடியாக உள்ளது.

Related Stories: