விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இரவை பகலாக மாற்றிய அதிசயம்!

விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஆஸ்திரேலியாவின் இரு மாநிலங்களில் இரவை பகலாக மாற்றியது. ‘ஷூட்டிங் ஸ்டார்’ என அழைக்கப்படும் விண்கற்கள், ஒன்றுடன் ஒன்று மோதி அவ்வப்போது மின்னல் போன்ற வெளிச்சத்தை உருவாக்குவது உண்டு. அந்தவகையில் ஆஸ்திரேலியாவின் தஸ்மானியா மற்றும் விக்டோரியா மாநில வான் பரப்பில் இந்த மின்னல்கள் தோன்றின. பகல் போன்ற பிரகாசத்தை ஏற்படுத்திய இந்த அரிய நிகழ்வு குடியிருப்பு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன.

இதனை உறுதி செய்துள்ள வல்லுநர்கள், உரசிக்கொண்ட விண்கற்களின் அளவு தெரியவில்லை என கூறியுள்ளனர். விண்கற்கள் ‘சாசர் பந்தின்’ அளவில் இருந்திருக்கலாம் என தெரிவிக்கும் ஆஸ்திரேலியாவின் குயீன் விக்டோரிய கோளரங்கத்தின் விண்வெளி ஆய்வாளர் ஒருவர், எரிக்கற்கள் உரசிய இடத்தில் வசிக்கும் மக்கள், லேசான பாதிப்பை உணர்ந்திருக்கலாம் என தெரிவிக்கின்றார்.

Related Stories: