கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் மோதியதில் பராமரிப்பு பணியில் இருந்த ரயில்வே தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் இருவர் மீது ரயில் மோதியதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நேராமலை பகுதியில் தாமிரபரணி ஆறானது செல்கிறது. இதன் மேல்பகுதியில் தற்போது இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டு அதில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. குறிப்பாக மூத்த அதிகாரி ரியாஸ் கான் தலைமையில் கேரளா கொல்லம் பகுதியை சேர்ந்த மதுசூதனன் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெய்ஷ் சந்த்மீனா என்ற இருவர் இரும்பு ரயில்வே தண்டவாளத்தில் அதிர்வுகளை அளவிடும் பணியை நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மும்பையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் திடீரென வந்தது. அப்போது அவர்கள் இருவரும் ரயில் தண்டவாளத்தில் ஒதுக்குபுறமாக ஒதுங்கி நிற்க சென்றனர். ஆனால் அதற்கு முன்பாகவே அந்த ரயிலானது அவர்கள் மீது மோதியது. இதில் மதுசூதனன் தாமிரபரணி ஆற்றில் தூக்கி வீசப்பட்டார். மற்றொருவர் ரயில் தண்டவாளத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதை தொடர்ந்து தகவலறிந்து அங்கு சென்ற நாகர்கோவில் ரயில்வே போலீசார் மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் உள்ளிட்டோர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் எதிரொலியாக கன்னியாகுமரியில் இருந்து பெங்களூர் அதேபோன்று கன்னியாகுமரியில் இருந்து கோட்டையும் செல்லும் 5 ரயில்கள் கடந்த 1 மணி நேரமாக போக்குவரத்து ஏற்பட்டு தற்பொழுது அந்த ரயிலானது இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கொல்லத்தை சேர்ந்த மதுசூதனன் என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் ரயில்வே துறையில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார். அதன்பிறகு தற்பொழுது சர்க்காரிய ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தான் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.

Related Stories: