ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89.5 கோடி பணப்பட்டுவாடா செய்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை அளித்துள்ளார். இல்லாவிட்டால், தேர்தல் நடைமுறைகளின் மீதும், தேர்தலை நடத்தும் அதிகாரிகள் மீதும் வாக்காளர்கள் கொண்டுள்ள நம்பகத்தன்மை பாழ்பட்டுவிடும் என கூறினார். வருமானவரித்துறை சோதனையின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய பட்டியல் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என கூறினார்.

Related Stories: