வெளிமாநில மாணவர்கள் முறைகேடு: மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: வெளிமாநில மாணவர்கள் கலந்துகொண்ட மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்ய கோரிய மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த 3 மாணவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சில மாதங்களுக்கு முன்பு மனு ஒன்றை தாக்கல் செய்தார்கள். அந்த மனுவில் தமிழகத்தில் உள்ள 23 மருத்துவக்கல்லூரியில் கிட்டத்தட்ட 85% மாநிலத்தவருக்கும் 15% இடங்கள் பிற மாநிலத்தவருக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டின் மருத்துவ கலந்தாய்வில் 126 வெளிமாநில மாணவர்கள் முறைகேடாக சேர்ந்திருக்கிறார்கள். இந்த மாணவர்களுக்கு முறையான இருப்பு சான்றிதழ் கிடையாது, இவர்கள் நிரந்தரமாகவே வெளிமாநிலத்தில் தங்கி இருக்கிறார்கள். ஆகவே இந்த ஆண்டுக்கான மருத்துவ கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும், அதைபோன்று மீண்டும் புதிதாக மருத்துவ கலந்தாய்வை நடத்தப்பட வேண்டும். மேலும் வெளிமாநிலத்தில் சேர்ந்த மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்கான இந்த மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் இந்த 126 மாணவர்களும் தங்களுடைய இருப்பிட சான்றிதழ் தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் ஏற்கனவே அவர்களுடைய இருப்பிட சான்றிதழ் தொடர்பான விவரங்களை வெளிமாநிலத்தவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி எம்.சுந்தர் இந்த வழக்கை தற்போது தள்ளுபடி செய்து இருக்கிறார்.

குறிப்பாக இந்த வழக்கில் முகாந்திரங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் மீண்டும் மருத்துவ கலந்தாய்வு நடத்த தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். தமிழக அரசை பொறுத்தளவில் இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தாங்களாகவே முன்வந்து விசாரணை நடத்தி கொள்ளலாம் என்ற உத்தரவை பிறப்பித்து தற்போது இந்த மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.

Related Stories: