தர்மேந்திர பிரதான் தகவல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடருமா?

புதுடெல்லி: சவூதியில் எண்ணெய் ஆலைகள் மீது கடந்த 14ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 19.5 சதவீதம் உயர்ந்து 72 டாலரை நெருங்கியது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆனால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 76.83க்கும் டீசல் 70.76க்கும் விற்கப்பட்டன.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதுகுறித்து கூறுகையில், ‘‘வூதியில் நடந்த தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை சில டாலர்கள் குறைந்து விட்டன. இருப்பினும், சர்வதேச சந்தையில் பதற்றம் தணிந்தால் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்து விடும் என்றார்.

Related Stories: