ஐஎஸ்எல் கால்பந்து சென்னை போட்டியை காண சீசன் டிக்கெட்

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐஎஸ்எல் கால்பந்து  போட்டிகளை காண வசதியாக 2வது ஆண்டாக சீசன் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 6வது சீசன் இம்மாதம் 20ம் தேதி கொச்சியில் தொடங்க உள்ளது. சென்னையின் எப்சி தனது முதல் போட்டியில்  எப்சி கோவாவுடன்  மோத உள்ளது. சென்னை களப் போட்டி அக்27ம் தேதி  தொடங்குகிறது. அதில் சென்னையின் எப்சி-மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதுகின்றன. இப்படி  சென்னையின் எப்சி மோதும் 9 ேபாட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கில்  நடைபெறும்.

இந்தப் போட்டிகளை காண சென்னையின் எப்சி இந்த ஆண்டும் சீசன் டிக்கெட் விற்பனையை தொடங்கி உள்ளது. இது குறித்து சென்னையின் எப்சி நிர்வாகிகள், ‘சீசன் டிக்ெகட்கள் ரூ.2700 முதல் ரூ.3150 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. டிக்கெட்களை திநகரில் உள்ள டிகி டாகா அலுவலகத்தில் நேரிலோ, இணையதளம் மூலாக வாங்கலாம். இந்த சீசன் டிக்கெட்கள் வாங்குபவர்களுக்கு  சென்னை அணியின் சீருடை, வீரர்கள் சுவரொட்டி,  தள்ளுபடி கூப்பன்கள் ஆகியவை தரப்படும். தொடர்ந்து 2வது ஆண்டாக சீசன் டிக்கெட் விற்பனை செய்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: