காங்கிரஸ் துணை தலைவர் கொலை வழக்கு வெடிகுண்டு வீசி, வெட்டிமுக்கிய குற்றவாளி கொலை

காலாப்பட்டு: புதுவை காலாப்பட்டு தேரோடும் வீதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (48). தனியார் மருந்து தொழிற்சாலையில் தண்ணீர் லாரி ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். புதுைவ வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ஜோசப் கொலைவழக்கில் சந்திரசேகர் முக்கிய  குற்றவாளியாக கைது செய்யப்பட்டு,  ஜாமீனில் வெளியில் வந்திருந்தார்.  தொடர்ந்து அவர் ஊருக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவரது மனைவி ஊரான கூனிமேடு அடுத்த மஞ்சங்குப்பத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் ஜோசப் கொலையின் மற்றொரு குற்றவாளியான பார்த்திபன் என்பவரின் மனைவி நேற்று உடல்நிலை பாதிப்பு காரணமாக இறந்தார். அவரது வீட்டுக்கு மனைவி சுமலதாவுடன் நேற்று காலை பைக்கில் சந்திரசேகர் சென்றார். கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனை எதிரே சென்றபோது, எதிரே 2 பைக்கில் வந்த 4 பேர் திடீரென அவரை வழிமறித்து நிறுத்தி சந்திரசேகர் மீது வெடிகுண்டை எடுத்து வீசினார்.

இதில் சந்திரசேகரும், அவரது மனைவியும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். வெடிகுண்டு வீசப்பட்டதில் சந்திரசேகரின் கை துண்டானது. மேலும் அவரது சட்டை தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. 4 பேரும் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் சந்திரசேகரின் தலை, முகத்தில் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்று விட்டது. இது குறித்து காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: