வரலாற்றை உங்கள் விருப்பத்திற்கு வளைக்க நினைப்பதா?: பாஜவுக்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு கண்டனம்

சென்னை: வரலாற்றை உங்கள் விருப்பத்திற்கு வளைக்க நினைப்பதா என்று பாஜவுக்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவர் ஜெ.அஸ்லம் பாஷா நேற்று ெவளியிட்ட அறிக்கை:நாடாளுமன்றத்தில் ஒரு முஸ்லிம் உறுப்பினர்கூட இருக்கக்கூடாது. ஒரு முதலமைச்சர் கூட இருக்கக்கூடாது என்பதன் வெளிப்பாடே காஷ்மீரின் மாநில அந்தஸ்து நீக்கம். இதன் மூலம் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கே முஸ்லிம்கள் வந்தேரிகளே  என வரலாற்றை மாற்ற பாஜ முயற்சிக்கிறது. அது இந்தியாவிற்கு பேராபத்தாக முடியும் என்பதை உணராமலேயே செய்கிறது.

ஆரியர்கள் தங்கள் சூத்திர அடிமைகளை கொண்டு நடத்தும் நாடகம் அவர்களுக்கு எதிராகவே திரும்பும் என்பதை உணர வேண்டும். ஆஷிபா என்ற சிறுமியை வன்புணர்வு செய்து கொலை செய்ததின் பின்னணியில் முஸ்லிம்களை அச்சுறுத்தி  அகதிகளாக வெளியேற்றிவிட வேண்டும். பின்னர் அதை பண்டிட்டுகளுக்கான மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே பாஜவின் நோக்கம். வரலாற்றை உங்கள் விருப்பத்திற்கு வளைக்க நினைத்தால் ஹிட்லரின் வரலாறை நாடே சொல்லும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: