3 சாலை திட்டங்களுக்கான ரூ.3,600 கோடி நிதி நிறுத்திவைப்பு சிறப்பு டிஆர்ஓ பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவால் பரபரப்பு

சென்னை: நிலம் கையகப்படுத்த தாமதம் ஏற்பட்டதால் 3 சாலை திட்டங்களுக்கான ₹3,600 கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.  தமிழகத்தில் பெருகி வரும் போக்குவரத்திற்கு ஏற்ப இந்த சாலைகளை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ₹2,169 கோடி செலவில் விழுப்புரம்- பாண்டிச்சேரி, ₹962 கோடி செலவில் பூண்டியான் குப்பம் - சட்டநாதபுரம் சாலை நான்கு வழித்தடங்களாகவும், ₹482 கோடியில் மீன்சுருட்டி -சிதம்பரம் வரை இரண்டு வழித்தடங்களாக மேம்படுத்தும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முன்வந்தது. தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், 18 மாதங்களாகியும் நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக நெடுஞ்சாலைத்துறை முடிக்கவில்லை.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர் நாகேந்திரா நாத் சின்கா தமிழக தலைமை செயலாளர் சண்முகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கடந்த 2018-19ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 3 பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடையாததால், இப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அந்த கடிதத்தில் கூறியிருப்பதாக ெதரிகிறது.இந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவதில் அலட்சியம் காட்டியதாக கூறி ேதசிய நெடுஞ்சாலை (நிலம் கையகப்படுத்துதல்) சிறப்பு வருவாய் அலுவலர்  மங்களம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முதன்மை செயல் அலுவலராக பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில் நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் தான் காரணம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காரணம் கூறியுள்ளது. ஆனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு 1.80 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்த 3 திட்டங்களும் கைவிடுவதற்கு நிதி பற்றாக்குறையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: