உடல் ஓவியம் நோய்களில் இருந்து பாதுகாக்கும்!

ஆடை கண்டுபிடிக்கப்படாத காலத்தில் நிர்வாணத்தை மறைப்பதற்காக உடல் முழுவதும் ஓவியங்களை வரைந்திருந்தனர் நம் முன்னோர்கள். இன்று  உடல் முழுவதும் ஓவியம் வரைந்து கொள்வது ‘பாடி பெயின்டிங்’ என்ற ஃபேஷனாகவே மாறிவிட்டது.

இதற்காக லட்சக்கணக்கில் பணத்தைச்  செலவழிப்பவர்களும் உண்டு. விஷயம் இதுவல்ல.ஸ்வீடன் மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பாடி பெயின்டிங்கைப் பற்றி 200  பேரிடம், இரண்டு வருடங்களாக ஆய்வுசெய்து ஆச்சரியமான பல முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இது மருத்துவ உலகில் பேரதிர்ச்சியைக்  கிளப்பியுள்ளது. ‘‘பாடி பெயின்டிங் செய்யப்பட்ட உடலை கொசு முதல் வேறு எந்த பூச்சிகளும் தீண்டாது. இதனால் பல்வேறு நோய்களிலிருந்து  நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். அத்துடன் நம் தோலின் சுருக்கங்களை பாடி பெயின்டிங் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக வெயில் தாக்கம் இருக்கவே  இருக்காது...’’ என்பது அந்த முடிவில் வெளியான முக்கியமான தகவல்கள். இந்த ஆய்வாளர்கள் 2019ம் வருடத்துக்கான ‘இக்’ நோபல் பரிசுக்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: