புளியந்தோப்பு பகுதியில் எரி சாராயத்தில் கலர் பொடி கலந்து விற்ற பெண் கைது: தப்பியோடிய கணவருக்கு வலை

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் எரி சாராயத்தில் கலர்பொடி கலந்து விற்ற பெண்ணை போலீசார் ைகது செய்தனர். மேலும், தப்பியோடிய அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். புளியந்தோப்பு கன்னிகாபுரம் வ.உ.சி. நகர், சாஸ்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்கப்படுவதாக புளியந்தோப்பு துணை ஆணையர் சாய் சரண் தேஜஸ்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் புளியந்தோப்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் புளியந்தோப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தீவிர சோதனை நடத்தினர்.

Advertising
Advertising

அப்போது கன்னிகாபுரத்தை சேர்ந்த சிலம்பரசன் (40) மற்றும் அவரது மனைவி தேவி (36) ஆகிய இருவரும் ஆந்திராவிலிருந்து எரிசாராயம் வாங்கி வந்து இங்கு கலர் பொடி கலந்து பாட்டிலில் அடைத்து டாஸ்மாக் மதுபானம் என்ற பெயரில் திருட்டுத்தனமாக அதிகவிலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதனையடுத்து தேவியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 50 மதுபாட்டில்கள் மற்றும் 50 லிட்டர் எரிசாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தேவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய சிலம்பரசன் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சாராயம் அதிகம் குடிப்பதினால் குடிப்பவர்கள் கண் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

Related Stories: