பஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் சுமித் நாகல்

சரயேவோ: பஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, இந்தியாவின் சுமித் நாகல் தகுதி பெற்றார். போஸ்னியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் அரை இறுதியில் ஸ்லோவகியா வீரர் பிலிப் ஹோரன்ஸ்கியுடன் நேற்று மோதிய சுமித் நாகல் 7-6, 6-2 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் அவர் நெதர்லாந்தின் டாலான் கிரீக்ஸ்பூருடன் மோதுகிறார். உலக தரவரிசையில் நாகல் 174வது இடத்திலும், டாலான் 187வது இடத்திலும் உள்ளனர். சமீபத்தில் நடந்த யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரருடன் மோதிய நாகல் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: