மு.க.ஸ்டாலின் தலைமையில் 16ல் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் : க.அன்பழகன் அறிவிப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்16ம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் 16ம் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 16ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.00 மணி அளவில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும். அதுபோது உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: