கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி முகாம்

சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில், பாதுகாப்பு ஒத்திகை குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது. கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலைய வளாகத்தில், சென்னை அணு மின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், அதிவேக ஈணுலை, பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்பட பல்வேறு பிரிவுகள் இயங்குகின்றன. அணுசக்தி துறை விதிகளின்படி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அவசர நிலை ஒத்திகை நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான ஒத்திகை நிகழ்ச்சி, வரும் 27ம் தேதி நடக்கவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் பயிற்சி முகாம் நேற்று  கல்பாக்கத்தில் நடந்தது. கலெக்டர் பொன்னையா முகாமை, துவக்கி வைத்து பாதுகாப்பு அவசர நிலை ஒத்திகையின் முக்கியத்துவம், மக்கள் பாதுகாப்பில் அதன் பங்கு குறித்து பேசினார். சென்னை அணுமின் நிலைய இயக்குனர் ஸ்ரீநிவாஸ், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, காஞ்சிபுரம் சப் கலெக்டர் சரவணன், செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம், பாவினி திட்ட இயக்குனர் கல்லோல் ராய், தாசில்தார்கள் தங்கராஜ், சங்கர், ராஜேந்திரன், துணை தாசில்தார் ரபிக் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: