கனடா போக இருந்தவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியதாகி விட்டதே சுபஸ்ரீயின் தந்தை கண்ணீர் பேட்டி

சென்னை: அடுத்த மாதம் கனடா போக இருந்தவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டியதாகிவிட்டதே என்று சுபஸ்ரீயின் தந்தை கண்ணீருடன் கூறினார். அதிமுக பேனர் விழுந்த விபத்தில் சிக்கி பலியான இன்ஜினியர் சுபஸ்ரீயின் தந்தை தந்தை ரவி கூறியதாவது:  ‘எனது ஒரே மகள் சுபஸ்ரீ பி.டெக் படித்து முடித்துவிட்டு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பேனர் கலாச்சாரத்தால் இன்று நான் என் மகளை இழந்துள்ளேன். எனக்கு வந்துள்ள நிலைமை போல் வேறு எந்த குடும்பத்திற்கும் வரக்கூடாது. சுபஸ்ரீ அடுத்த மாதம் கனடா போக இருந்தார். ஆனால் இந்த பேனரால் இன்று அவர் விண்ணுலகம் சென்றுவிட்டார். எங்கள் குடும்பத்திற்கு அவள்தான் மரமாக இருந்தார். இன்று அந்த மரம் சாய்ந்துவிட்டது. அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வேண்டியதாகி விட்டதே’ என கண்ணீருடன் தெரிவித்தார்.

Related Stories: