காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஏன்? தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு கூட்டங்கள்: மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஏன் என்பது குறித்து தமிழகம் முழுவதும் பாஜ சார்பில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடக்கிறது. இதில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.தமிழக பாஜ மாநில ெசயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்ட அறிக்கை: காஷ்மீருக்கு 370வது பிரிவு ஏன் அமலாக்கப்பட்டது. இப்போது ஏன் நீக்கப்பட்டுள்ளது. அதனால், ஏற்படும் மாற்றங்கள் என்ன, காஷ்மீர் மக்களுக்கும், நம் நாட்டிற்கும் விளைய இருக்கும் நன்மைகள் என்ன என்பதை எல்லாம் விளக்கும் வகையில் மக்கள் சந்திப்பு அரங்க நிகழ்ச்சிகள் தமிழகமெங்கும் நடைபெற உள்ளது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர், பாஜ பொது செயலாளர் முரளிதர் ராவ், தமிழக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்

சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட 51 நகரங்களில் ஒரே நாடு, ஒரே சட்டம், தேச ஒற்றுமை பிரசார இயக்கம் என்ற பெயரில் இக்கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இரண்டு பிரிவுகளாக பிரசார இயக்கம் நடைபெற இருக்கிறது. ஒன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அறிவுசார் பிரிவு அமைப்பாளர் கனகசபாபதி ஆகியோர் தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.மற்றொன்று அனைத்து பிரிவு பொதுமக்களையும் அழைத்து கூட்டங்கள் நடத்தப்பட இருக்கிறது. வருகிற 18ம் தேதி முதல் 30ம் தேதி முடிய இக்கூட்டங்கள் நடைபெறும். கூட்டத்திற்கான பொறுப்பாளராக, மாநில செயலாளர் கரு.நாகராஜன், துணை பொறுப்பாளர்களாக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், திருச்சி கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியம், மாநில விவசாய அணி துணை தலைவர் ஜி.கே.நாகராஜ் மற்றும் மாவட்டந்தோறும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: