அமைச்சர் உதயகுமார் பேட்டி முதல்வர் எடப்பாடி 8வது உலக அதிசயம்

பரமக்குடி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி 8வது உலக அதிசயம் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளிதார். அப்போது அவர் கூறியதாவது: மோடியின் வழியை பின்பற்றாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். தமிழகத்தில் இதற்கு முன் இருந்த முதல்வர்கள் செய்யாததை செய்வதால், எடப்பாடி பழனிசாமி முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக செயல்பட்டு வருகிறார். வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதால் இவர் எட்டாவது உலக அதிசயம் என்றார்.

Advertising
Advertising

Related Stories: