வாக்காளர் பட்டியல் திருத்தங்களை சரிபார்க்க வேண்டும்: மாவட்ட தலைவர்களுக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வாக்காளர் பட்டியல் சரிபார்க்க இந்த ஆண்டு புதிய நடைமுறையை அறிவித்து உள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகர, கிராம  தலைவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள்  அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்கள் பகுதி வாக்குச்சாவடிகளில் விடுபட்ட வாக்காளர்களின் பெயர்கள், திருத்தங்களை அதற்கான விண்ணப்ப படிவங்களில் பூர்த்தி செய்து அவர்களின்  கையொப்பம் பெற்று  வாக்குச்சாவடி அலுவலரிடம் வாக்காளரின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஆவண நகல்களுடன் சேர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertising
Advertising

 ஒரு வாக்குச்சாவடி முகவர் ஒரு நாளைக்கு 10 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வாக்காளர்களிடம் பெற்று உரிய ஆவண நகல்களுடன் வாக்குச்சாவடி அலுவலரிடம் சேர்க்க தேர்தல் ஆணையம் அனுமதித்து இருக்கிறது.  இந்த வாய்ப்பை  நமது கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார, நகர தலைவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு பின்னர், நவம்பர் மாதம் 2, 3, 9 மற்றும் 10 தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அச்சமயம் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் அந்தந்த  வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும்  திருத்தங்கள், பெயர் சேர்ப்பு பணிகள் சரியாக உள்ளனவா என்பதை கவனத்துடன் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

Related Stories: