மத்தியில் பாஜக அரசு 100 நாளில் சாதித்தது என்ன ? : அடுக்கடுக்காக பட்டியலிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை : சென்னை கிண்டியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மத்தியில் பாஜக அரசு 100 நாளில் சாதித்தது என்ன என்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

*காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது பிரிவை மோடி அரசு ரத்து செய்து சாதனை படைத்துள்ளது.

*பாஜக தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியை 370வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் மோடி அரசு செயல்படுத்தியுள்ளது.

*சிறப்பு அந்தஸ்து ரத்தால் காஷ்மீரில் பட்டியலின மக்கள் பயன் அடைவார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான இட ஒதுக்கீடு ஜம்மு - காஷ்மீரில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

 

*‘சட்டப்பிரிவு 370: ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்கு உபயோகமாக இல்லை’.தேசிய மகளிர் ஆணையமும் செயல்படாமல் இருந்தது. இந்த சீர்திருத்தத்தால் உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். நிறைய முதலீட்டாளர்கள் வருகை புரிவர்.

*ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் 370ஐ நீக்குவது ஜனசங்க காலம் முதல் எங்களது கொள்கையாக இருந்து வந்ததுதான்.

*வங்கிகள் இணைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் அடுத்த நிலைக்கு மேம்பட்டுச் செல்கிறது. வங்கிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை பற்றி அந்தந்த வங்கி நிர்வாகமே முடிவு எடுக்கவேண்டும்.

*5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைய சிறிய வங்கிகள் இணைப்பு உதவும்

*ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குறைந்த ப்ரீமியத்தில் உயரிய சிகிச்சையை ஏழைகள் பெறுகின்றனர்.

41 லட்ச்ம் பேர் இதுவரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் உயர் சிகிச்சை பெற்றுள்ளனர். 16 ஆயிரம் மருத்துவமனைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 10 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

*அடுத்த 2 ஆண்டுகளில் 1.95 கோடி வீடுகள் கட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.  2022க்குள் அனைவருக்கும் மின்சாரம், குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழாய் மூலம் குடிநீர் வழங்க சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளோம்.

*ஃபிட் இந்தியா திட்டத்தின் கீழ் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை பராமரிக்க ஊக்கமளிக்கப்படும்.

*பொருளாதாரம் வேகமாக வளர ஜிஎஸ்டியும் உதவுகிறது.ஒரே வரியான ஜிஎஸ்டி மூலம் சரக்கு போக்குவரத்து செலவு குறைந்துள்ளது.

*விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு 3 தவணையாக மொத்தம் ரூ.6,000 அளிக்கப்படுகிறது. இது தவிர ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்கப்பட்டு வருகிறது.  6.37 கோடி விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

*சந்திராயன் 2 திட்டத்தில் 99.9% வேற்றி கிடைத்துள்ளது. இஸ்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்

 

*பயங்கரவாதத்ததை தடுக்க உலக அளவில் இந்தியா பரப்புரை மேற்கொண்டு வருகிறது

*உள்கட்டமைப்பு துறையில் 100 லட்சம் கோடி முதலீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

*உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.

*மின்சார கார் விற்பனையை ஊக்குவிக்க வரியை குறைத்துள்ளோம். ஊழலுக்கு வழிவகுக்கும் தேவையில்லாத சட்டங்களை நீக்கியுள்ளோம். அவசியமற்ற 58 சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

*Ease of Doing Business என்று சொல்லப்படும் இண்டெக்ஸில் 142-வது இடத்தில் இருந்த இந்தியாவை இப்போது 77-வது இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம்.

 *முத்தலாக் உள்ளிட்ட பெண்களின் உரிமைகளை நிலைநாட்டும் திட்டங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளது.

*வாகன விற்பனை சரிவு ஏன்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பல்வேறு காரணங்களால் வாகன விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. நிலைமையை சரி செய்ய நிதித் துறை அமைச்சகம் சார்பில் ஆலோசனைகளை நடத்தியுள்ளோம் என்றும் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.

Related Stories: