1000 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் கோயில் கல்தூணில் முதல்வர் அரசு சாதனை விளக்க சிற்பங்கள்: பாஜ போராட்டம், போலீசார் தடியடி

திருமலை: தெலங்கானாவில் ஐதராபாத்நகரிலிருந்து சுமார் 65 கிமீ தொலைவில் யாதகிரிகுட்டா என்ற சிறுநகரம் உள்ளது. அங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலை திருப்பதி ஏழுமலையான் கோயில் போல் சர்வதேச அளவில் புகழ் பெறச் செய்ய வேண்டும் என்று தெலங்கானா மாநில அரசு முடிவு செய்தது. இதற்காக ₹1800 கோடி நிதி ஒதுக்கி கோயிலில் புனரமைப்பு பணிகள் மற்றும்  15 ஏக்கர் பரப்பளவில் தங்கும் அறைகள் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

2020ம் ஆண்டுக்குள் மொத்த பணிகளையும் முடித்து பக்தர்களின் வழிபாட்டிற்கு கோயிலை திறக்க தெலங்கானா மாநில அரசு முடிவு செய்துள்ளது. கோயிலில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் கல் தூண்களில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர  ராவ் உருவம், தெலங்கானா மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கான அடையாளங்கள் ஐதராபாத் நகரின் அடையாளமாக திகழும் சார்மினார் கட்டிடம் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அத்துமீறல்களுடன் கூடிய சிற்பங்கள்  செதுக்கப்பட்ட கல் தூண்கள் கோயில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையறிந்து பாஜ.வினர் நேற்று கோயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை துணை ராணுவத்தினரும் போலீசாரும் விரட்டியடித்தனர். இதனால்  ேகாயில் வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories: