சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி மேடிசன் கீஸ் சாம்பியன்: மெட்வதேவ் அசத்தல்

சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உள்ளூர் வீராங்கனை மேடிசன் கீஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் ஸ்வெட்லனா  கஸ்னட்சோவாவுடன் மோதிய மேடிசன் கீஸ் (16வது ரேங்க்) 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கஸ்னட்சோவா கடும் நெருக்கடி கொடுத்ததால், ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக  நீடித்தது.  மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் கீஸ் 7-5, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் 1மணி, 44 நிமிடம் போராடி வென்று கோப்பையை கைப்பற்றினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவ்  7-6 (7-3), 6-4 என்ற நேர் செட்களில் பெல்ஜியம் வீரர் டேவிட் காபினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

Advertising
Advertising

Related Stories: