ஐசிசி டெஸ்ட் தரவரிசை 2வது இடத்துக்கு முன்னேறினார் ஸ்மித்

துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் ஓராண்டு தடை விதிக்கப்பட்ட ஸ்மித், தண்டனை காலம்  முடிந்து மீண்டும் களமிறங்கி விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணியுடன் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டின் 2 இன்னிங்சிலும் சதம் விளாசிய அவர் (144, 142), லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில் 92 ரன் அடித்து  அசத்தினார். ஆர்ச்சரின் பவுன்சர் தாக்குதலில் காயம் அடைந்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் விளையாடி தனது மன உறுதியை வெளிப்படுத்தினார்.

Advertising
Advertising

மூளை அதிர்ச்சியின் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் அவர் 3வது டெஸ்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்ட தரவரிசையில், நியூசிலாந்து கேப்டன் கேன்  வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளிய ஸ்மித் 2வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலிடத்தில் நீடிக்கிறார். எனினும், இருவருக்கும் இடையே 9 புள்ளிகள் மட்டுமே இடைவெளி உள்ளதால் முதலிடத்துக்கான  போட்டி கடுமையாகி உள்ளது.

Related Stories: