அமமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட பலர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தனர்

சென்னை: அமமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட ஏராளமானோர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தனர்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று அமமுக கட்சியின்

வழக்கறிஞர் அணி சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் மே.ப.காமராஜ் (முன்னாள் எம்எல்ஏ) தலைமையில், முன்னாள் எம்எல்ஏ சி.சண்முகம், எஸ்.சுந்தரராசன், கன்னியாகுமரி ராபர்ட் கெனிங்டன், பாமகவைச் சேர்ந்த ஒன்றிய விவசாய அணித்  தலைவர், ஊர்கவுண்டர் ஜி.ராமன், அதிமுகவைச் சேர்ந்த சித்திக்குன்னனூர் கிளைச் செயலாளர் கே.அறிவழகன், ஊராட்சி செயலாளர் பி.பழனிசாமி, அமமுகவைச் சேர்ந்த நகர துணைத் தலைவர் எம்.கோவிந்தராஜ், 1வது வார்டு செயலாளர்  எம்.செல்வம், பாமகவைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் எம்.சிவலிங்கம், தெத்திகிரிப்பட்டி ஊராட்சி செயலாளர் என்.மதியழகன் மற்றும் என்.பெருமாள், மேட்டூர் ஆர்.ஐயப்பன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அ.ம.மு.க- பாமக கட்சியினர் திமுகவில்  இணைந்தனர்.
Advertising
Advertising

அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கொள்கைப் பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர்  வீரபாண்டி ஆ.ராஜா, மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளர் வை.காவேரி, மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளர் பா.செந்தமிழ்செல்வன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் எஸ்.அம்மாசி, மேச்சேரி ஒன்றிய  பொறுப்பாளர் சீனிவாச பெருமாள், தாரமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர் ரவிக்குமார், தாரமங்கலம் பேரூர் செயலாளர் குப்பு (எ) குணசேகரன், ஏ.எம்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: