இங்கிலாந்தின் செயலிழந்த மின்மையத்தின் குளிரூட்டும் கோபுரங்கள் தகர்ப்பு

இங்கிலாந்து: இங்கிலாந்தின் மின்சார மையம் வெடி வைத்து தகர்க்கபட்டது.அப்போது ஏற்பட்ட அதிர்வில் மின்கம்பங்கள் தீ பற்றி எரிந்ததால் 40,000 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டுஷையர் என்ற இடத்தில்  செயலிழந்த மின்மையத்திற்கான  குளிரூட்டும் மூன்று கோபுரங்கள் கட்டப்பட்டிருந்தன. இந்த கோபுரங்களை இடிப்பதற்கு ஆக்ஸ்போர்டுஷையர் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து 375 அடி உயர கொண்ட மூன்று கோபுரங்களும் வெடிவைத்து நொடி பொழுதில் தகர்க்கப்பட்டன.  

Advertising
Advertising

அந்த மின்மையத்தின் குளிரூட்டும் கோபுரங்கள் சரிந்து விழுந்த நிலையில் தரையில் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக 1000 அடி தூரத்தில் இருந்த மின்கம்பங்கள் வெடித்து தீ பற்றி எரிந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த சுமார் 4,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Related Stories: