திருப்பூரில் வருகிற 15ம் தேதி தேமுதிக முப்பெரும் விழா: விஜயகாந்த் பங்கேற்பு

சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. தொகுதி ஒதுக்கீட்டுக்கான கையெழுத்திடும் நிகழ்ச்சியில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். அதன் பின்னர்,  அவர் எந்தவித பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.  இந் நிலையில் அவர் வருகிற 15ம் தேதி திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் தலைமையில் செப்டம்பர் 15ம் தேதி திருப்பூரில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, தேமுதிக 15ம் ஆண்டு துவக்க நாள் விழா மற்றும்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது.

Advertising
Advertising

Related Stories: