மது ஆலைகளை மூடும் எண்ணம் இல்லை : அமைச்சர் பேட்டி

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு 50 லட்சம் மதிப்பில்  குப்பை அள்ளும் ஆட்டோ வழங்கல், சட்டமன்ற உறுப்பினர்  நிதி 17 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட 2 அங்கன்வாடி மையங்கள் திறப்பு விழா, 34 லட்சம் மதிப்பில் 4 ரேஷன் கடைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஆகியவை நேற்று நடந்தது.

இதில், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு, முடிந்த பணிகளை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தனர். அப்போது அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறுகையில், ‘பூரண மதுவிலக்கே தமிழக அரசின் கொள்கை. தற்போது 1,500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மது ஆலையை மூடும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. மதுக்கடைகள் குறைக்கப்பட்டாலே, மது ஆலைகள் தானாக குறைந்து விடும்,’ என்றார்.

Related Stories: