திருத்தணி கோர்ட்டில் சாட்சி சொல்ல வந்த வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியானதால் பரபரப்பு

சென்னை: கோர்ட்டில் சாட்சி சொல்ல வந்த வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்ட வீடியோ நேற்று வெளியானது. இது சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் பரபரப்பானது. திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபரை காரில் வந்த 4 பேர் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். தப்பியோடி அங்குள்ள ஓட்டலுக்குள் புகுந்த வாலிபரை சரமாரியாக தலையில் வெட்டிவிட்டு கும்பல் சென்றது. சம்பவ இடத்திற்கு திருத்தணி போலீசார் சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த வாலிபரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். பின்னர் போலீசார், அந்த வாலிபர் பற்றி விசாரித்தபோது, திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த மகேஷ் (25) என தெரியவந்தது. பின்னர் தனிப்படை போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்தனர்.

Advertising
Advertising

விசாரணையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய்பேட்டையில் வாலிபால் போட்டி நடத்துவதில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கொலைசெய்யப்பட்ட மகேஷின் நண்பர் விக்கி என்பவரை கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி கொலை செய்தனர். இதில் விக்னேஷ், அஜித்குமார், ரவிக்குமார், திேனஷ், கோபிராஜ், அஸ்வின், நரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் விக்கி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட தினேஷ் என்பவருடைய சகோதரர் கார்த்திக்கை கடந்த மாதம் அவர் மனைவியுடன் பைக்கில் சென்றபோது இறந்துபோன விக்கி தரப்பினர் மிரட்டினர்.  இதுசம்மந்தமாக கடந்த 1ம் தேதி தினேஷ் சென்று கார்த்திக்கை மிரட்டியதற்கான காரணம் குறித்து அவர்களிடம் ேகட்டுள்ளார். அப்போது அவரை பால் தினகரன், இன்னொரு விக்கி மற்றும் இன்னொரு தினேஷ் ஆகியோர் சேர்ந்து தினேஷை வெட்டினர். பின்னர் மருத்துவமனையில் அவர் உயிர் பிழைத்தார்.

இதுசம்மந்தமாக தினேைஷ ெவட்டிய பால் தினகரன், விக்கி, தினேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர்களை நேற்று முன்தினம்  திருத்தணி நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த கொண்டுவந்தனர். அப்போது அவர்களை பார்ப்பதற்கு அவரது நண்பரான மகேஷ் திருத்தணி வந்தார். இந்நிலையில் மகேஷ், விக்கியின் கொலை வழக்கில் முக்கிய சாட்சி என்பதால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி இந்த சம்பவம் நடந்துள்ளது. மகேஷின் உடலில் 25 வெட்டுகள் விழுந்துள்ளது. குழந்தைகளுடன் ஓட்டலில் இருந்த சிலர் அவர்களின் கண்களை புடவையால் மூடிக் கொண்டனர். சிலர் கிச்சன் நோக்கி பாதுகாப்பை தேடி ஓடிய காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அது தற்போது வெளியானதால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.

Related Stories: