இன்று 86வது பிறந்த நாள் முரசொலி மாறன் திருவுருவச்சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்: மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் அறிக்கை

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு இன்று மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கை:  தலைவர் கலைஞரின் மனச்சாட்சியாக விளங்கியவரும்-திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூளையாக செயல்பட்டவரும்-மத்திய அமைச்சராக இருந்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்று மிகச் சிறப்பாக பணியாற்றியவருமாகிய முரசொலி மாறனின் 86வது பிறந்த நாளினை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் அமைந்துள்ள முரசொலி மாறன் திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முன்னணியினர் மலர் மாலை அணிவிக்கின்றனர்.

Advertising
Advertising

முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், தலைமைச் செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள்-இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்-பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், வட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, கலை, இலக்கியப் பகுத்தறிவு பேரவை, சிறுபான்மையினர் நலஉரிமை பிரிவு, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆகிய அனைத்து அணிகளின் மாவட்ட, பகுதி அமைப்பாளர்கள்-துணை அமைப்பாளர்கள்  உள்ளிட்ட  அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: