சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் பிளிஸ்கோவா : ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் தகுதிநிலை வீராங்கனை ரெபக்கா பீட்டர்சனுடன் (ஸ்வீடன்) மோதிய பிளிஸ்கோவா 7-5, 6-4 என்ற நேர் செட்களில் போராடி வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 42 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் (16வது ரேங்க்) மோதிய நட்சத்திர வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரோமானியா) 1-6, 6-3, 5-7 என்ற செட் கணக்கில் 2 மணி, 2 நிமிடம் போராடி தோற்றார்.

Advertising
Advertising

முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா (ஜப்பான்), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஆஷ்லி பார்தி (ஆஸி.), மரியா சக்கரி (கிரீஸ்), ஸ்வெட்லனா கஸ்னட்சோவா (ரஷ்யா), சோபியா கெனின் (அமெரிக்கா) ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர். பெடரர் வெளியேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் களமிறங்கிய சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் 3-6, 4-6 என்ற நேர் செட்களில் ஆந்த்ரே ருப்லெவிடம் (70வது ரேங்க், ரஷ்யா) தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), லூகாஸ் பவுல்லி (பிரான்ஸ்), டானில் மெட்வதேவ் (ரஷ்யா), பாடிஸ்டா அகுத் (ஸ்பெயினோ), ரிச்சர்ட் காஸ்கே (பிரான்ஸ்), நிஷியோகா (ஜப்பான்) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories: