‘முப்படைகளுக்கு ஒரே தளபதி நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்’

சென்னை: முப்படைகளுக்கு ஒரே தளபதி என்பது நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் கூறியுள்ளார். தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: உலகின் நான்காவது பெரிய ராணுவ சக்தியாக இந்தியா மாறியுள்ளது. பலமான ராணுவ கட்டமைப்பை நாடு சுதந்திரம் அடைந்த 73 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக வலுப்பெற செய்யப்பட்டுள்ளது. தரைப்படை, விமானப்படை, கப்பல் படை என முப்படைகளுக்கு தனிதனியே தளபதிகளை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Advertising
Advertising

இந்த நிலையில், முப்படைகளுக்கு ஒரே தளபதி நியமிக்கப்படவுள்ளதாக பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரே தலைமையின் கீழ் கொண்டு வரும்போது, ஏற்கனவே முப்படைகளுக்கு தளபதிகளாக செயல்பட்டு வருபவர்களின் அதிகாரம் குறைக்கப்படுவதோடு, அதிகார போட்டி ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகும். எனவே இந்த அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: