பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை ராணுவ மேஜர் ஜெனரல் அதிரடியாக பணி நீக்கம்

புதுடெல்லி: பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ மேஜர் ஜெனரல் நேற்று அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ராணுவத்தின் மேஜர் ஜெனரலாக பணியாற்றியவர் ஆர்.எஸ்.ஜஸ்வால். இவர் கடந்த 2016ம் ஆண்டு, நாகலாந்தில் உள்ள அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக பணியாற்றினார். அப்போது, இவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் அதிகாரி ஒருவர் புகார் தெரிவித்தார்.

Advertising
Advertising

இது தொடர்பாக ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தியது. தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த ஜஸ்வால், ராணுவ அதிகாரிகள் இடையேயான கோஷ்டி பூசலில் தான் சிக்க வைக்கப்பட்டேன் என்றார். குற்றச்சாட்டு உண்மை என கூறிய ராணுவ நீதிமன்றம், அவரை ராணுவ சட்ட விதிமுறைகள்படி டிஸ்மிஸ் செய்ய பரிந்துரை செய்தது. இதை ஏற்று மேஜர் ஜெனரல் ஜஸ்வாலை டிஸ்மிஸ் செய்து  ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று உத்தரவு பிறப்பித்தார். 

Related Stories: